காணி பிணக்கின் கோரம்: மற்றுமொரு உயிரை காவு வாங்கிய வாள்வெட்டு
வவுனியா (Vavuniya) - ஓமந்தை பகுதியில் காணி பிரச்சினை காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளார்.
ஓமந்தை - கதிரவேலு பூவரசன்குளத்தைச் சேர்ந்த 42 வயதான ரூ.திலீபன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மரணித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (10) ஓமந்தை பகுதியில் காணி பிரச்சினை காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமாரு நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தீவிர சிகிச்சை
கதிரவேலு, பூவரசன்குளம் பகுதியில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கிடையில் காணி தொடர்பாக சிறிய பிணக்கு ஒன்று இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் அந்த இருவர் மீதும் மிளகாய் தூளை அள்ளி வீசிவிட்டு அவர்களை விரட்டி வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது, இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளங்கோ (வயது 38) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின தந்தையான ரூ.திலீபன் என்பவர், படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
படுகாயமடைந்தவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri