கொழும்பில் பிரதான வீதியில் சாப்பிடுவதற்காக கஞ்சி சமைக்கும் மக்கள் (Video)
கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து பாரிய ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் மகிந்த மற்றும் ஜனாதிபதி கோட்டாபய பதவி விலக வேண்டும் என தெரிவித்து, கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் மக்கள் அனைவரும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது மக்கள் பிரதான வீதியில் விறகடுப்பில் சோற்றுக் கஞ்சி சமைத்து வருவதுடன், இதனை மாத்திரமே தற்போது உண்ண வேண்டிய நிலையில் மக்கள் இருப்பதாகவும், தற்போது சமைக்கப்படும் கஞ்சியையே தாம் இன்று உண்ணவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தாம் இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும் என்பதால் பதவிகளில் இருந்து விலகிச் செல்லுமாறு கோட்டாபய மற்றும் மகிந்த ஆகியோரை வலியுறுத்தியுள்ளதுடன், மக்கள் அனைவரும் காலிமுகத்திடலில் இருக்கும் நிலையில் நாமல் நுவரெலியாவில் தேநீர் அருந்துவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளதுடன், அவர்களும் கோட்டாபய மற்றும் மகிந்தவை பதவிகளில் இருந்து செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர்.