கவனத்தை ஈர்க்கும் கொழும்பு! காலிமுகத்திடலுக்குள் நுழைந்த மிகப்பெரிய குழு (Video)
கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆரம்பமான அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி தற்போது காலிமுகத்திடலை அடைந்துள்ளது.
இந்த நிலையில் காலிமுகத்திடல் வீதியூடான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலிமுகத்திடலில் போராட்டம் இன்று 20ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கு ஆதரவாக அலரிமாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் போராட்டமும் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்டு வந்த ஆர்ப்பாட்டமானது பேரணியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பேரணியானது தற்போது காலிமுகத்திடல் நோக்கி நகர்வதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போனோரை தேடியறியும் குழு, நவ சம சமாஜ கட்சி, சமசமாஜ ஒற்றுமை குழு, இலங்கை வங்கி ஊழியர் சங்கம் என்பன இணைந்துள்ளன.
மேலும், இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டுள்ள இளைஞர் யுவதிகள் பல்வேறு வாத்தியக்கருவிகளை இசைத்த வண்ணம், அதிரவைக்கும் பாடல் பாடியபடி காலிமுகத்திடலை நோக்கி வித்தியாசமான முறையில் தமது ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டபேரணியானது அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பின் பிரதான இடங்களில் கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் வர்த்தகர்கள், ஊழியர்கள் என அனைவரும் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.
அரசாங்கத்தை பதவி விலகுமாறு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கொழும்பு புறக்கோட்டை பகுதியை சேர்ந்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து எமது நாடு எமக்கு வேண்டும் என்ற விண்ணைப்பிளக்கும் கோசங்களுடன் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது பேரணியாக முன்னெடுக்கப்பட்டு காலிமுகத்திடலை நோக்கி செல்லவுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.













பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
