இலங்கையின் கிரிக்கட் கோட்டையை உடைத்து துவம்சம் செய்த அவுஸ்திரேலியர்கள்
இலங்கை அணியின் நீண்ட கால கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கோட்டையாக இருந்து வந்த காலி, அவுஸ்திரேலியர்களால் இடித்து அழிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அணி இந்த மைதானத்தில் பல அணிகளுக்கு எதிராக சிறந்த டெஸ்ட் வெற்றிகளை கடந்த காலங்களில் பெற்றுள்ளது.
இதனால் காலி மைதானம் இலங்கை கிரிக்கட்டின் கோட்டை என்று கருதப்பட்டு வந்தது.
அவுஸ்திரேலிய அணி
எனினும் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியால், அந்த கோட்டை அழிக்கப்பட்டு, இடிக்கப்பட்டு, புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
காலியில் இதற்கு முன்னர் நடந்த போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது. ஆனால் தொடரின் முதல் பந்திலிருந்தே அவுஸ்திரேலியர்கள் ஆதிக்கம் செலுத்திய விதம், சொந்த மைதான ஆட்டங்களில் மிக மோசமான ஆட்டமாக இது அமைந்துவிட்டது என்பதைக் குறிக்கிறது.
காலியில் மேற்கொள்ளவுள்ள சுழற்பந்து வீச்சுக்காக அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள், துபாயில் முன்னதாகவே பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
மிகக் குறைந்த தயாரிப்பு
எனினும் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள், சுழற்பந்து வீச்சுக்கு எதிராக மிகக் குறைந்த தயாரிப்புகளையே கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இலங்கை, இரண்டாவது டெஸ்டில் சில மோசமான முடிவுகளை எடுத்தது.
முதல் டெஸ்டில் நிசான் பீரிஸ் விக்கெட்டுகள் இல்லாமல் 189 ஓட்டங்களை வழங்கியிருந்தார்.
இந்தநிலையில் அவர் இரண்டாவது டெஸ்ட்டில் இருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், அதற்கு பதிலாக முதல் டெஸ்டில் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியின்போதும், அணிக்காக சிறப்பாக பங்களித்த, இடதுமுறை சுழல்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வான்டர்சேயை இலங்கை அணி நீக்கியது.
விமர்சனங்கள்
உண்மையில் புரியாத காரணங்களுக்காக மற்றொரு வலதுமுறை சுழல்பந்து வீச்சாளராக ரமேஸ் மெண்டிஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.
இலங்கையின் முதல் நிலை துடுப்பாட்டமும் சராசரியை விட குறைவாக இருந்தது, பெரும்பாலான வீரர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கத் தவறிவிட்டனர் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இலங்கை கிரிக்கெட் இன்று இருக்கும் இடத்தில் இருந்து முன்னேற வேண்டுமானால், வெவ்வேறு எதிரணிகளுக்கு எதிராக வெவ்வேறு அணுகுமுறைகளை அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்று பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)