இரண்டாவது டெஸ்ட்டிலும் வலுவான நிலையில் அவுஸ்திரேலிய அணி
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்றைய ஆட்ட முடிவின்போது, இலங்கை அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் 8 விக்கட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதன்படி இலங்கை அணி, அவுஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை காட்டிலும் 54 ஓட்டங்களால் மாத்திரம் முன்னிலை வகிக்கிறது.
இந்தநிலையில் அவுஸ்திரேலிய தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடும் போது இலகுவான ஓட்ட இலக்கையே அது பெறவேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய அணி
முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்துள்ள நிலையில், இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களே தற்போது துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கின்றனர்.
எனவே ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப நாளைய தினம் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு முகங்கொடுப்பது இலங்கை அணியின் பின்னிலை வீரர்களுக்கு சவாலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 257 ஓட்டங்களையும், அவுஸ்திரேலிய அணி தமது முதல் இன்னிங்ஸில் 414 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)