சர்வதேசத்தில் பாதிப்பான பட்டியலில் சேர்க்கப்பட்ட இலங்கை
சர்வதேச ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம், இலங்கையை தமது இணக்கமற்ற பட்டியலில் சேர்த்துள்ளது.
இலங்கையின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு, தமது சட்ட அமைப்பில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கத் தவறியதை அடுத்தே, இந்த பட்டியலில் உலக அமைப்பு இலங்கையை சேர்த்துள்ளது.
ஏற்கனவே சேர்க்கப்பட்டவை
ஏற்கனவே ரஸ்யா, சர்வதேச பொஸ்க் பெலோட்டா கூட்டமைப்பு மற்றும் சர்வதேச உடற்பயிற்சி மற்றும் உடற்கட்டமைப்பு கூட்டமைப்பு என்பன உலக அமைப்பின் இணங்காதப் பட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், இந்த பட்டியலுக்குள் சேர்க்கப்பட்ட நான்காவது நாடாக இலங்கை கருதப்படுகிறது.
கவனிப்பு பட்டியல்
குறித்த உலக அமைப்பு முன்னதாக, இலங்கையின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பை கவனிப்புப் பட்டியலில் சேர்த்திருந்த நிலையிலேயே தற்போது இணங்காத பட்டியலில் சேர்த்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




