போர் நிறுத்தம் வேண்டாம்-சமாதான உடன்படிக்கையே வேண்டும்! டிரம்ப்
உக்ரைனில் போர் நிறுத்தத்துக்கு பதிலாக நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கு நேரடியாக செல்ல விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
தமது ட்ரூத் சோசியல் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் நேற்று இடம்பெற்ற முக்கிய சந்திப்புக்கு பின்னர், இந்த கருத்தை அவர் பதிவிட்டுள்ளார்.
போர் நிறுத்தங்கள்
போர் நிறுத்தங்கள் பெரும்பாலும் நிலைத்து நிற்காது என்பதன் காரணமாகவே இந்த கருத்தை தாம் முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அவர், உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை நாளைய தினம் வோசிங்டனில் சந்தித்து, ஒரு சமாதான ஒப்பந்தத்திற்கு உடன்படுமாறு வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை உக்ரைன், நேட்டோவுடன் இணைவதை ரஸ்யா தடுக்கக்கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.



