ஊக்கமருந்துகள் தொடர்பான திருத்தப்பட்ட சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
ஊக்கமருந்து பயன்பாட்டிற்கு எதிரான பிரகடன சட்டமூலத்தின் கீழ் காணப்படும் உத்தரவுகளை நாடாளுமன்ற அனுமதிக்கென முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2013ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க சட்டத்தின் கீழ், இலங்கை ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது.
விளையாட்டுக்களில் ஈடுபடும் போது ஊக்கமருந்து பயன்பாட்டிற்கு எதிரான பிரகடன சட்டமூலத்தின் ஏற்பாடுகளுக்கமைய செயற்பாடுகளை முன்னெடுப்பது அதன் பொறுப்பாகும்.
ஊக்கமருந்து
அத்துடன் உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தின் தரத்திற்கமைய செயற்படும் குறித்த நிறுவனம் சர்வதேச ரீதியாக தடைக்குள்ளான ஊக்கமருந்து பட்டியலை உள்நாட்டில் புதுப்பித்து நடைமுறைப்படுத்தும் பொறுப்பைக் கொண்டுள்ளது.
அதன் பிரகாரம் புதிதாக ஊக்கமருந்துகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள மருந்துப் பொருட்கள், தடை செய்யப்பட்ட மருந்துகள் தொடர்பான புதிய ஏற்பாடுகள் என்பன குறித்த விடயங்களை நாடாளுமன்ற அனுமதிக்கு சமர்ப்பிப்பது தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
