கருப்பு உடையில் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் குதித்த சஜித் அணி
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு எதிராக இன்று (23) நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.
இன்று காலை, ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, பிரதேச சபை தலைவரின் கொலைக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படுவதாகக் கூறியுள்ளார்.
கொலையாளிகளை கைது செய்யுமாறு கோரிக்கை
இதை அடையாளப்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து உறுப்பினர்களும் இன்று கறுப்பு உடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருவார்கள் என்றும், நேற்று (22) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டுவதன் மூலம் அரசாங்கம் கொலையை விசாரிப்பதைத் தவிர்க்கிறது என்றும், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும், உண்மையான கொலையாளிகளைக் கைது செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரவும் இந்த போராட்டம் நடத்தப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan
