முடிந்தால் நடத்திக் காட்டுங்கள்! அரசாங்கத்திற்கு சவால்
ஐந்தாயிரம் ரூபாயை வழங்கி மக்களை ஏமாற்றி தேர்தலுக்கு செல்ல முயற்சிக்கும் அரசாங்கத்திற்கு முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார (Ranjith Madduma Bandara தெரிவித்துள்ளார்.
மாகாணா சபைத் தேர்தல் வெற்றியுடன் ஐக்கிய மக்கள் சக்தி, சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையில் அரசாங்கத்தை அமைக்கும் வெற்றிகரமான பயணத்தை தொடங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரஞ்சித் மத்துமபண்டார இதனை கூறியுள்ளார்.
ஊழல், மோசடிகளில் தொடர்பில்லாத, நேர்மையான, மக்கள் மீது அனுதாபம் கொண்ட அணியினர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை சுற்றி ஒன்று கூடி வருகின்றனர்.
தொழிற்சங்க இணையமைப்புகளை வலுப்படுத்தி எதிர்கால தேர்தலை சந்திக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது எனவும் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam