அநுர அரசை சாடும் சஜித் தரப்பு
வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் போலியானவை என்பதை ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசு தற்போது நிரூபித்து வருகின்றது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக (Gayantha Karunathilaka) ஊடகங்களிடம் தெரிவித்ததாவது, "அரிசி, தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குகே கையேந்தும் நிலையை இந்த அரசு உருவாக்கியுள்ளது.
பாதை தவறிப் பயணிக்கின்றது
மாற்றம் என்று கூறி வந்த இந்த அரசு, வாக்களித்த மக்களை ஏமாற்றி வருகின்றது.

தேர்தல் காலங்களில் தாம் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் போலியானவை என்பதை அநுர அரசு தற்போது நிரூபித்து வருகின்றது.
இந்த அரசு பாதை தவறிப் பயணிக்கின்றது என்பதே உண்மை. பாதை தவறிப் பயணித்த கோட்டாபய அரசுக்கு இறுதியில் என்ன நடந்தது என்பதை அநுர அரசு நினைவில் கொள்ள வேண்டும்"என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam