அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) மற்றும் பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சமர்ப்பித்த பதில் விரிவுரை தொடர்பிலான உத்தரவை, பெப்ரவரி 21ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு கிரேக்க பத்திரங்களில் பணத்தை முதலீடு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.8 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக இவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
எழுத்துப்பூர்வ பதில்கள்
இந்த வழக்கு இன்று (23) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவித முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இலஞ்ச ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கையளிக்க முடியாது மற்றும் பராமரிக்க முடியாது என பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்.
குறித்த ஆரம்ப ஆட்சேபனைகளுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இன்று எழுத்துப்பூர்வ பதில்களை சமர்ப்பித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
