நாடாளுமன்றிக்கு சிக்கலாக மாறியுள்ள அர்ச்சுனாவின் சிறப்புரிமை!

Sri Lankan political crisis Bimal Rathnayake Ramanathan Archchuna
By Dharu Jan 23, 2025 07:16 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த சிறப்புரிமை பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், சபை விவகாரங்களை முன்னெடுத்து செல்வதில் பெரும் சிக்கல்நிலை உருவாகும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இராமநாதன் அர்ச்சுனா இன்று(23.01.2024) சபையில் முன்வைத்த கருத்து தொடர்பில் பதில் வழங்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 

“சபாநாயகரே இங்கு நாடாளுமன்ற உறுப்பினர முன்வைத்துள்ள கருத்துக்களுக்கான தீர்வை வழங்குவது உங்களது கடமை.

எனினும் அவர் முன்வைத்த சிறப்புரிமை குற்றச்சாட்டு தொடர்பில் சபையில் தெளிவுபடுத்த வேண்டும்.

ஜனாதிபதி அநுரவின் அதிரடி தீர்மானம்! அதிகரிக்கப் போகும் டொலரின் பெறுமதி

ஜனாதிபதி அநுரவின் அதிரடி தீர்மானம்! அதிகரிக்கப் போகும் டொலரின் பெறுமதி

ஜனநாயகத்திற்கு எதிரான விடயம்

அவர் தற்போது நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என ஆளும் தரப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார்.

அவருக்கு வாய்ப்பு வழங்காமை ஜனநாயகத்திற்கு எதிரான விடயமாகும்.

நாடாளுமன்றிக்கு சிக்கலாக மாறியுள்ள அர்ச்சுனாவின் சிறப்புரிமை! | Ruling Party Mp Who Supported R Archuna

எனினும் இதற்கான முழு பொறுப்பும் எதிர்க்கட்சி தலைவரிடமே உள்ளது. அவருக்கான நேரத்தை எதிர்க்கட்சி தலைவரே ஒதுக்கியிருக்க வேண்டும்.

இதனை நாடாளுமன்றிலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி, நான் அவருக்கு எடுத்துரைத்துள்ளேன்.

இந்நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்காமை தொடர்பில் எங்களை கைகாட்டுவதில் எந்த பயனும் இல்லை.

இது தொடர்பில் மீண்டும் சபைக்கு அறிவிக்கின்றேன். தயவுசெய்து அவருக்கான நேரத்தை எதிர்க்கட்சி வழங்க வேண்டும் என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

என்னை சுட்டு வீழ்த்துங்கள்! சபையில் அர்ச்சுனா எம்.பி இன்றும் ஆவேசப் பேச்சு

என்னை சுட்டு வீழ்த்துங்கள்! சபையில் அர்ச்சுனா எம்.பி இன்றும் ஆவேசப் பேச்சு

அர்ச்சுனா மீது பிடியாணை

அரசாங்கம் என்ற வகையில் அவரின் உரிமைக்காக நாங்கள் குரல் கொடுப்போம்.

ஏனைய துணை குழுக்களுக்கு கூட அவரை நியமித்துள்ளோம். சபாநாயகரே, இந்த பிரச்சினைக்கு நாடாளுமன்ற செயற்குழுவில் கலந்தாலோசித்து உரிய தீர்வை வழங்க வேண்டும்.

நாடாளுமன்றிக்கு சிக்கலாக மாறியுள்ள அர்ச்சுனாவின் சிறப்புரிமை! | Ruling Party Mp Who Supported R Archuna

இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தை நடத்தி செல்வதில் பெரும் சிக்கல் நிலை உருவாகும்.

அர்ச்சுனா மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கும் அரசாங்கத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

பாதுகாப்பு பிரிவு தொடர்பான நடைமுறைகள் சட்டத்திற்கு அமைவாகவே இடம்பெறும். எவ்வாறாயினும் அவரை கைது செய்வதாக இருந்தால், அது சபாநாயகரின் அனுமதியினுடனே இடம்பெறும்.

நாங்கள் தேசிய ஒருமைப்பாட்டோடு வேலை செய்ய விரும்புகிறரோம். தயவு செய்து இந்த விடயத்துக்குள் தேசிய பிரச்சினையை உள்ளிழுக்க வேண்டாம்" என்றார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு விரைவில்.. பிரதமர் உறுதி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு விரைவில்.. பிரதமர் உறுதி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US