சமத்துவக் கட்சியின் அமைப்பாளர் மீது தாக்குதல்
ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் போட்டியிடுகின்ற சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான முன்னாள் போராளி வேங்கை மீது மற்றொரு கட்சியின் உள்ளூராட்சி சபை வேட்பாளரான ஒருவர் தாக்குதலை நடத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் கிளிநொச்சி - ஸ்கந்தபுரம் சந்தியில் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளது.
அநாகரிகமான வார்த்தைகள்
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மு.சந்திரகுமாருக்கு ஆதரவாக ஸ்கந்தபுரம் பிரதேசத்தில் பெண்கள் பரப்புரை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு நபர் ஒருவர் மது போதையில் சென்றுள்ளார்.

இந்நிலையில், பரப்புரை நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த பெண்களிடம் மிகவும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது அவ்விடத்துக்குச் சென்ற சமத்துவக் கட்சியின் அமைப்பாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri