ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு! ஹர்ஷ வெளியிட்ட தகவல்
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன மற்றும் ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோருக்கு தேசிய பட்டியல் ஆசனங்களை வழங்க கலந்தோலோசித்து வருவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய (21.11.2024) அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எரான் விக்ரமரத்ன மற்றும் ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோர் கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளதாகவும் ஹர்ஷ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பட்டியல்
அத்துடன், கட்சியின் தேசிய பட்டியல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு வாழ் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு தேசிய பட்டியல் ஆசனமொன்றை வழங்குமாறு பலரும் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam