புதையல் தோண்டிய பூசாரி உள்ளிட்ட ஆறு பேர் கைது
யாழ்ப்பாணத்திலிருந்து சிலாபம் சென்று புதையல் தோண்டிய பூசாரி உள்ளிட்ட ஆறு பேர் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பூசாரி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிலாபம் நகர சபை உறுப்பினரும் அவரது இரண்டு மகன்களும் மற்றும் கண்டியைச் சேர்ந்த இருவருமாக ஆறு பேர் சிலாபம் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஆறு பேரும், ஆராய்ச்சிக்கட்டுவ மானாவெரிய பகுதியில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதனை அடுத்து குறித்த பகுதியினை பொலிஸார் சுற்றிவளைத்து இருந்தனர்.
இதன்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பூசாரி, இரண்டு கோழிகளை உயிர்ப்பலி கொடுத்து புதையல் பூஜையைச் செய்துள்ளார்.
அவர்களை சுற்றி வளைத்த பொலிஸார் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், புதையல் தோண்டப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவற்றைத் தடய பொருட்களாக மீட்டதுடன், அங்கிருந்த ஆறு பேரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
அங்கு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், ஆறு பேரையும் சிலாபம் நீதவான்
நீதிமன்றில் முற்படுத்திய போது, ஆறு பேரையும் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி
வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
