அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்த 6 பேருக்கும் பிணை
மக்கள் போராட்ட இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் பேரணியின் போது நேற்று (03) கைது செய்யப்பட்ட 6 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று(4) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கண்டனப் பேரணி
தற்போதைய அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் வேகமாக அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக மக்கள் போராட்ட இயக்கத்தினால் நேற்று(3) பிற்பகல் இந்தக் கண்டனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொரளை கெம்பல் மைதானத்திற்கு அருகில் ஆரம்பமான பேரணி, புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமான முறையில் மக்களை ஒன்றிணைத்தமை மற்றும் உரிய அனுமதிப் பத்திரம் இன்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri