கொழும்பு துறைமுக நகரில் முதலீடு செய்யும் ஆறு நிறுவனங்கள்
கொழும்பு துறைமுக நகரில் முதலீடு செய்ய ஏற்கனவே ஆறு நிறுவனங்கள் தயாராக இருப்பதாக முதலீட்டு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
துறைமுக நகருக்குள் தற்காலிக வர்த்தகங்கள்
துறைமுக நகரின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. சாதாரண சட்டத்திட்டங்களை உருவாக்கி, வர்த்தமானியில் வெளியிட அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிதி சட்டத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்த பின்னர் வர்த்தமானியில் வெளியிடப்படும். கழிவு நீர் கட்டமைப்புக்கு தேவையான 200 மில்லியன் ரூபா நிதியை ஜனாதிபதி எமக்கு வழங்கியுள்ளர்.
துறைமுக நகருக்குள் தற்காலிக வர்த்தகங்களை செய்யவும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.பிரதான வர்த்தகங்கள் வந்த பின்னர், தற்காலிக வர்த்தகங்களை நாங்கள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் இவற்றை பயன்படுத்த முடியும் எனவும் திலும் அமுனுகம மேலும் கூறியுள்ளார்.