கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்டம் திருத்தங்களுடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்
கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்டம் திருத்தங்களுடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை ஆலோசனை குழுவினால் இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்ட மூலமானது உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்திற்கு அமைய திருத்தி அமைக்கப்பட வேண்டியது உசிதமானது என பிரதமர் மஹிந்த தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட மூலத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் காணப்படுவதாகவும் சில சரத்துக்களை உள்ளடக்குவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவை எனவும், சிலவற்றுக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை எனவும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 2 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் மேடையில் திடீரென கண்ணீர்விட்டு அழுத பாடகர் பென்னி தயாள்- வீடியோவுடன் இதோ, என்ன ஆனது? Cineulagam
