பாரிய வெடிகுண்டினை இரும்பிற்காக கடத்தி செல்ல முற்பட்ட அறுவர் கைது(VIDEO)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணியில் கைவிடப்பட்ட பாரிய இரண்டு வெடிகுண்டுகளை இரும்பிற்காகக் கடத்தி செல்ல முற்பட்ட 6 பேரைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணியில் கைவிடப்பட்ட இரண்டு பாரிய வெடிகுண்டு இருந்துள்ளது.
அங்கு வேலி அமைப்பதற்காக நேற்றையதினம் சென்ற நபர் வெடிகுண்டினை அடையாளம் கண்டு அதனை இரும்பிற்கு விற்பதற்காக எடுத்துச் செல்ல முற்பட்ட போது புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியினை சேர்ந்த 6 பேரைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
ஒவ்வொன்றும் சுமார் 400 கிலோக்கிராம் எடைகொண்ட குறித்த குண்டுகள் இரும்பிற்காகக் கடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள்
கைவேலி புதுக்குடியிருப்பினை சேர்ந்தவர்கள் இவர்களை இன்று
மாங்குளம் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.







Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri
