சிவனொளிபாதமலை அடிவாரத்தில் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்ட நபர்! வெளியான தகவல்
சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற ஒருவர், தனக்கு தானே தீ வைத்துக்கொண்டுள்ளார்.
நல்லத்தண்ணி பகுதியில் இன்று அதிகாலை இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த நபர், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லத்தண்ணி தனியார் வாகன தரிப்பிடத்தில் வைத்து, இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தீ வைத்துக்கொண்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றைய தினம் (02) 36 யாத்திரிகர்களுடன் பேருந்தொன்றில் வருகைத்தந்துள்ள சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
