சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை இன்றுடன் நிறைவு
ஆறு மாதகாலமாக இடம்பெற்று வந்த சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை இன்றுடன் நிறைவடைவதாக சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான நாயக்க பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இதன்படி சிவனொளிபாதமலை உச்சியில் மக்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்த சமன் தெய்வ உருவச்சிலை மற்றும் புனித விக்கிரங்கள் அனைத்தும் இன்று நல்லதண்ணியில் இருக்கும் விகாரைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்னவினால் அனுசாசன முறையின் பின் பிரித் ஓதப்பட்டு மேற்படி சமன் தெய்வம் மற்றும் பூஜைப் பொருட்கள் உள்ளிட்ட புனித விக்கிரங்கள் நாளை காலை 8 மணியளவில் இரத்தினபுரி பெல்மதுளை ரஜமகா விகாரைக்கு வாகன தொடரணியாக எடுத்து செல்லப்பவுள்ளது.
பௌர்ணமி தினத்தில் வழிபாடு
நோட்டன் லக்ஸபான வழியாக கிதுல்கலை, கரவனல்ல, தெகியோவிட்ட, யட்டியாந்தோட்டை, அவிசாவளை சென்று இரத்தினபுரி ரஜமாக விகாரைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
மேலும். பூஜைக்காக வைக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் பௌர்ணமி தினத்தில் வழிபாட்டிற்காக சிவனொளிபாதமலைக்கு மீண்டும் கொண்டு வரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |