சிவமோகன் மீது தமிழரசு கட்சி நடவடிக்கை
இலங்கை தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைத் தலைவர் மருத்துவர் சி.சிவமோகனை கட்சியில் இருந்து இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தால், சிவமோகனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில்,
வவுனியாவில் 28.12.2024ஆம் திகதி நடைபெற்ற எமது கட்சியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, தாங்கள் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்படுகிறீர்கள் என்பதை இத்தால் அறியத்தருகிறேன்.
விளக்கம் கோரும் கடிதம்
நாடாளுமன்றத் தேர்தல் 2024 காலப்பகுதியில் கட்சியின் வன்னித் தேர்தல் தொகுதி வேட்பாளர்களுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை ஊடகங்களில் தெரிவித்து, கட்சிக்கும் கட்சிசார்ந்த வேட்பாளர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் வெளிப்படையாக ஈடுபட்டதை கட்சி அறிந்துள்ளது.

எனவே, இச்செயற்பாட்டிற்காக உங்களிடம் விளக்கம் கோருவதோடு உங்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் நிறைவுபெறும் வரை தாங்கள் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளீர்கள் என அறியத்தருகிறேன்.

உங்கள் விளக்கத்தை இக்கடிதம் கிடைத்து ஒருவார காலத்திற்குள் எனக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam