முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்கார, விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்றையதினம்(17.01.2025) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதை அடுத்தே, பிணை வழங்கப்பட்டுள்ளது.
தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நான்கு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுஷ பகிரங்கம்
திசர இரோஷன நாணயக்கார, கடந்த டிசம்பர் 28ஆம் திகதி மோசடி தொடர்பான முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்(CID) பிபிலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
நெதர்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, தனது சகோதரன் மேற்கொண்ட மோசடிகளுக்கும் தனக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று மனுஷ நாணயக்கார முன்னதாக தெரிவித்திருந்தார்.
தனது சகோதரருக்கு எதிராக முதலாவது முறைப்பாட்டை தானே மேற்கொண்டிருந்ததாகவும் தனது அமைச்சில் இருந்து அவரை வெளியேற்றியிருந்ததாகவும் மனுஷ சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |