பதவியை தக்கவைத்துக்கொள்ளவே 13ம் திருத்தச்சட்டம்:சிவஞானம் சிறிதரன் சாடல் (Photos)
ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தான் ஜனாதிபதியாக வருவதற்கு 13ஆம் திருத்தச்சட்டத்தினை கொண்டுவருவதாக ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்துகின்றார் அவர் அரசியல் தீர்வையும் பெற்றுத் தரமாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுகட்சியின் இளைஞர் அணியின் புதிய நிர்வாகத்தெரிவு கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கட்சி அலுவலகத்தில் இன்று ( 13.08.2023 ) நடைபெற்றது. இதன் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு
இது தொடர்பில் இவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தாம் ஜனாதிபதியாகவருவதற்காக 13ம் திருத்தச்சட்டத்தினை கொண்டுவருவதாக ஒரு மாயையினை தொற்றத்தை ஏற்படுத்துகின்றார் அவர் அரசியல் தீர்வையும் பெற்றுத்தரமாட்டார் மக்களை ஒரு குழப்பத்தில் வைத்திருப்பார் என தெரிவித்துள்ளார்.

இவ் நிர்வாகத் தெரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வேலமாலிதன் மற்றும் முன்னாள் வடமாகான கல்வி அமச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும்100 ற்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 15 மணி நேரம் முன்
தன்னைப்போல் வெளியே அனுப்பப்பட்ட மீனா, நக்கலாக ரோஹினி சொன்ன விஷயம்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam