முல்லைத்தீவில் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கு விசாரணை திகதியிடப்பட்டது(Video)
எம்.கே.சிவாஜிலிங்கம், து.ரவிகரன் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கு விசாரணை யூலை 26 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில், மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியைச் சுவீகரிக்கச் சென்ற பொழுது நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தர்களை கடமை செய்யவிடாமல் தடுத்து வாகனம் சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழங்கு விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக இந்த வழங்கு தொடரப்பட்டுள்ளது.
இதன்போது குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள் சார்பாக ஆயராகிய சட்டத்தரணிகள்
நீதவானிடம் விண்ணப்பித்தமைக்கு அமைவாகத் தொடர்ச்சியாக வழங்கு தாக்கல்
செய்யப்படாமல் சட்டமா அதிபரிடம் இருந்து எதிர்பார்க்கப்படுவதாக சொல்லப்படுவதை
அடுத்து அழைப்பாணை அனுப்பப்பட்டால் மாத்திரம் நீதிமன்றத்திற்கு வருகை தரவேண்டும் என்று
நீதிபதியால் சொல்லப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கு எதிர்வரும் யூலை மாதம் 26 ஆம்
திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
