பொதுத்தேர்தல் முடிவுகள் முழு நாட்டிற்கும் தமிழீழ மக்களுக்கும் சொல்லிய செய்தி
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் முழு நாட்டிற்கும் தமிழீழ மக்களுக்கும் பல செய்திகளை சொல்லியுள்ளது என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16.11.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அறிவித்த அவர்,
அங்கஜன் போன்றோரின் வாக்குகள்
ஈபிடிபி மற்றும் அங்கஜன் போன்றோரின் வாக்குகளே அநுர அரசுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80 ஆயிரம் வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது. ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் முழு நாட்டிற்கும் தமிழீழ மக்களுக்கும் பல செய்திகளை சொல்லியுள்ளது. தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம். தோல்விகள் பின்னடைவுகள் புதிதல்ல. மீண்டும் எழுந்து நிற்போம்.
தமிழ்த் தேசியத்தை எவரும் பேச கூடாது என்று அர்த்தமல்ல. தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை. மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுங்கள்” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
11 பந்தில் 50 ரன் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி! உலக சாதனை..இலங்கைக்கு எதிராக ருத்ரதாண்டவம் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri