சம்பந்தனின் கருத்துக்கு பதிலளித்துள்ள சிவாஜிலிங்கம்
இலங்கை அரசாங்கம் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையின் தீர்வாகக் கொண்டுள்ளது என நினைப்பது அடி முட்டாள்தனமான நம்பிக்கை என்று தமிழ்த் தேசியக் கட்சி செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் (MK Shivaji Lingam) தெரிவித்துள்ளார். 
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் சம்பந்தன் ( Sampanthan) ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் முகமாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், இணைந்த வடக்கு - கிழக்குக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு என்பதுதான், சர்வதேச மட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் இலங்கை அரசும் சேர்ந்து இணங்கிக் கொண்ட விடயம்.
அதற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் முடிவு எதையும் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் எடுக்கக் கூடாது என்று சம்பந்தன் கூறியிருக்கின்றார்.
இலங்கை அரசு இன்னமும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்வாகக் கொண்டுள்ளது என்பது அடி முட்டாள் தனமான நம்பிக்கை" என கூறியுள்ளார்.
மேலும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,



| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        