ரஷ்யாவிற்கு கூலிப்படையை அனுப்பியமை குறித்து நடிகைகளிடம் விசாரணை
ரஷ்யாவிற்கு கூலிப்படை அனுப்பிய விவகாரம் தொடர்பில் சில இளம் நடிகைகளிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஓய்வு பெற்ற படைவீரர்களை சட்டவிரோதமான முறையில் ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்ததாக சதுரங்க என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நடிகைகளிடம் விசாரணை
இந்த நபரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சார்பில் விளம்பரம் செய்த பிரபல இளம் நடிகைகள் சிலரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

கண்டி - கட்டுகஸ்தோட்டை வீதியில் அமைந்துள்ள கட்டடமொன்றில் சதுரங்க என்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நபர் தனது வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தை சமூக ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பிரசார நடவடிக்கைகளில் சில இளம் நடிகைககள் பங்களிப்பினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரச்சாரம் செய்யப்பட்ட விடயம்
ஐரோப்பிய நாடுகளில் மாணவர் மற்றும் சுற்றுலா விசா வழங்குவதாக பிரசாரம் செய்யப்பட்ட போதிலும், ரஷ்யாவிற்கு கூலிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பிரதான சந்தேகநபர் தற்பொழுது போலந்தில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தாம் ரஷயாவில் தங்கியிருப்பதாக கூறி கூலிப் படைக்கு ஆட்களை திரட்டியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam