சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு - நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சீரற்ற காலநிலை காரணமாக மின்சாரத் தடையை சீர்செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அனர்த்த நிலைமைகளின் கீழ், சில பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான விநியோக மின்னழுத்தக் கம்பிகள் மற்றும் மின்மாற்றிகள் மீது மரங்கள் விழுந்துள்ளன.
இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை
மின் தடையை சீரமைக்க தங்களால் முடிந்தவற்றை செய்வோம் எனவும் அதற்கான ஆதரவை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, அறுந்து விழுந்த மின்கம்பிகளை எந்த வகையிலும் தொடவேண்டாம் எனவும் ஊழியர்களின் பணிகளில் தடை ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய நெரிசல் காரணமாக அனைத்து தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிக்க முடியாது எனவும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் விரும்பிய விரைவான சேவையை வழங்க முயற்சித் வருகிறோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
