ஜுலை முதலாம் திகதி வரை காலஅவகாசம்: அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இலங்கைப் பிரஜைகளின் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகன உரிமைப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் தகவல்களையும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு தொடர்ச்சியாக வழங்குமாறும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கி கணக்கு விபரம்
இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் உட்பட எந்தவொரு நிதி நிறுவனத்தினாலும் பராமரிக்கப்படும் அனைத்து நடப்புக் கணக்குகளின் விவரங்கள் மற்றும் கடன்கள் மற்றும் முற்பணங்கள் பற்றிய தகவல்களும் வழங்கப்பட வேண்டும்.
மேலும் இந்த தகலுக்கு அமைய ஏப்ரல் 1ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு நபரோ அல்லது அரச நிறுவனமோ எந்தவொரு தகவலையும் பராமரிக்கவில்லை என்றால், அந்த தகவலை இந்த ஆண்டு ஜூலை 1 முதல் பராமரிக்கத் தொடங்க வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
வீட்டிற்கு வந்த மனைவியை பார்த்து பாண்டியன் சொன்ன வார்த்தை, ஷாக்கான கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam