காய்கறி தட்டுப்பாட்டால் நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை
சந்தையில் அண்மைய காலமாக ஏற்பட்டுள்ள காய்கறி தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு என்பன நாடாளுமன்ற உணவகத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. வரவு செலவுத் திட்டம் தொடர்பான இரண்டாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.
நேற்றைய தினம் நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவகம் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான உணவகம் என்பவற்றில் மதிய வேளை உணவில் பரிமாறப்பட்ட உணவுகளில் காய்கறி உணவுகள் எதுவும் பரிமாறப்படவில்லை.
காய்கறிகளின் விலை அதிகரிப்பு மற்றும் காய்கறிகளுக்கு சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு என்பன இதற்கு காரணம் என நாடாளுமன்ற பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அதேவேளை எதிர்வரும் நாட்களில் மதிய உணவுக்கு காய்கறி குழம்புகளை சமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்ற உணவகங்களில் மதிய உணவுக்காக சோறு, கிழங்கு பொறியல், தேங்காய் சம்பல், மீட் போல் குழம்பு, வெள்ளரிக்காய் செலட் உள்ளிட்டவையே பரிமாற்றபட்டுள்ளன.
