முல்லைத்தீவில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் தொடர்பான தற்போதைய நிலைமை
முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை பிரதேசத்திலிருந்து கடலுக்குச் சென்று காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்கள் தொடர்பாக தற்போது சில தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன் அடிப்படையில், குறித்த கடற்றொழிலாளர்கள் கடல் நீரோட்டம் மற்றும் பலத்த காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு ஆழ்கடல் பகுதிக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீன்பிடிப் படகுகளுடன் இணைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
கிடைத்துள்ள தகவலின்படி, குறித்த மூன்று கடற்றொழிலாளர்களில் ஒருவர் மீன்பிடிப் படகில் இருப்பதாகவும், ஏனைய இருவரும் மற்றைய கடற்றொழில் படகுகளில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக நடவடிக்கை
எனினும், இத்தகவல்கள் இதுவரையில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆழ்கடல் கடற்றொழில் படகுகள் பல நாட்கள் கடலில் தங்கியிருந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின்னரே கரை திரும்புவதால், குறித்த படகுகள் கரையை வந்தடைந்த பின்னரே கடற்றொழிலார்களின் இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு நிலைமையை உறுதிப்படுத்த முடியும்.

மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொண்டு இத்தகவல்களை உறுதிப்படுத்தும் நோக்கில், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் மாவட்ட செயலகம் ஆகியன இலங்கை கடற்படையினருக்கு இவ்விடயம் தொடர்பாக அறிவித்துள்ளது.
அத்துடன், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து மேலதிக நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.
ரூ. 4000 கோடி பட்ஜெட் ராமாயணா படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்... கணிக்கப்பட்ட விவரம் Cineulagam