தென்னிலங்கையில் கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் பலி - சிறுமிகள் படுகாயம்
தென்னிலங்கையில் இறுதிச் சடங்கிற்கு சென்று திரும்பிய சகோதரிகள் கோர விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரணை - கொழும்பு பிரதான வீதியில் நேற்றிரவு விபத்து ஏற்பட்டதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியை கடக்க முயன்ற நால்வர் மீது கார் ஒன்று மோதியமையினால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதி கைது
விபத்தை ஏற்படுத்திய 28 வயதான சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இறுதிச் சடங்கு நிகழ்வொன்றுக்கு சென்ற சகோதரிகள் இருவரே தங்களது இரண்டு மகள்களுடன் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக வீதியை கடக்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை
காயமடைந்த நால்வரும் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சகோதரிகள் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
45 மற்றும் 50 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த 11 மற்றும் 17 வயதுடைய இரு மகள்களும் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 32 நிமிடங்கள் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
