சிங்கள தலைவர்களுக்கு மன்னிப்பு கோரும் அளவு தைரியம் இல்லை..! சிவஞானம் சிறீதரன் கொந்தளிப்பு

Sri Lankan Tamils S. Sritharan Sri Lanka Politician Sri Lankan Peoples NPP Government
By Rakesh May 21, 2026 07:44 AM GMT
Report

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்காக இதுவரை எந்தவொரு சிங்கள தலைவரும் மன்னிப்பு கேட்கும் தைரியத்தை காட்டவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் நேற்று(20.05.2026) நடைபெற்ற மாநாட்டில், சர்வமதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் ஏனைய நாடுகளின் தூதுவர்கள் முன்னிலையில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

செப்டெம்பர் வரை மின்கட்டண உயர்வு இல்லை.. இன்று வெளியான அறிவிப்பு

செப்டெம்பர் வரை மின்கட்டண உயர்வு இல்லை.. இன்று வெளியான அறிவிப்பு

காணி சுவீகரிப்பு

அவர் மேலும் உரையாற்றுகையில், இலங்கையிலே பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கி விகாரைகள் அமைக்கப்படும் அதேவேளை, ஏனைய மதங்களின் நிலங்கள் குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன.

நீதிமன்றத் தீர்ப்புகளையும் மீறி குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை, நீராவியடி, தையிட்டி, குச்சவெளி ஆகிய இடங்களில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக, குச்சவெளியில் இரண்டு வீதமே சிங்கள மக்கள் வாழும் சூழலில் 36 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிங்கள தலைவர்களுக்கு மன்னிப்பு கோரும் அளவு தைரியம் இல்லை..! சிவஞானம் சிறீதரன் கொந்தளிப்பு | Siridaran S Opinion On The Position Of Tamils

சவேந்திர சில்வா மற்றும் மகிந்த ராஜபக்ச காலத்தில் பறிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் மக்கள் அகதிகளாக வாழ்கின்றார்கள். அண்மையில் மலையகத்தில் நீலகாமம் தோட்ட மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு கொட்டில்கள் உடைக்கப்பட்டுள்ளன.

தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையக மக்கள் இன்றும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தப்படுகின்றார்கள். கடந்த மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் திரண்ட மக்களின் கண்ணீரே தமிழ் மக்களின் ஆறாத வடுக்களுக்கு சான்றாகும்.

சிங்கள தலைவர்களுக்கு மன்னிப்பு கோரும் அளவு தைரியம் இல்லை..! சிவஞானம் சிறீதரன் கொந்தளிப்பு | Siridaran S Opinion On The Position Of Tamils

2009இல் பாதர் பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்த 56 போராளிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டோருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. முன்னாள் மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் தன் கணவனைக் கைகளால் ஒப்படைத்தும் இன்னும் நீதிமன்றில் நீதி கிடைக்கவில்லை.

யுத்த காலத்தில் ஒரு இலட்சத்து 46 ஆயிரம் பேர் காணாமல் போயும் கொல்லப்பட்டும் இருக்கின்றார்கள் என்ற உண்மையான வரலாற்று ஆவணத்தை மன்னாரின் மறைந்த பேராயர் இராயப்பு ஜோசப் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தார்.

தமிழீழ பிரகடனம்

உள்நாட்டில் நீதி விசாரணை சரியாக நடக்காததால் தான் நாங்கள் ஜெனிவாவை நாட வேண்டியுள்ளது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவோ உள்நாட்டில்தான் பேச வேண்டும் என்கின்றார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்காக இதுவரை எந்தவொரு சிங்கள தலைவரும் மன்னிப்பு கேட்கும் தைரியத்தை காட்டவில்லை. கிளிநொச்சி - வட்டக்கச்சியில் பிறந்து வளர்ந்த நான் போரின் கொடூரங்களை நேரில் கண்டவன். 1976இல் தந்தை செல்வா சுட்டிக்காட்டியபடி பண்டாரநாயக்க மற்றும் டட்லி சேனநாயக்க ஆகியோருடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் தென்னிலங்கை ஆட்சியாளர்களால் கிழித்தெறியப்பட்டன.

சிங்கள தலைவர்களுக்கு மன்னிப்பு கோரும் அளவு தைரியம் இல்லை..! சிவஞானம் சிறீதரன் கொந்தளிப்பு | Siridaran S Opinion On The Position Of Tamils

1978இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டு வந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் 40 வருடங்களாக தமிழர்கள் அழிந்துகொண்டிருக்கின்றோம். இதனால்தான் வேறு வழியின்றி 1974 மே 14இல் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் பண்ணாகத்தில் தமிழீழ பிரகடனம் செய்ய நேரிட்டது.

அரசின் இத்தகைய ஆயுத வன்முறைதான் அன்று குட்டிமணி, தங்கத்துரை மற்றும் தலைவர் பிரபாகரன் போன்ற தமிழ் இளைஞர்களை துப்பாக்கி தூக்க வைத்தது. வெலிக்கடை சிறையில் கண்கள் தோண்டப்படுவதற்கு முன்னால், 'எனது கண்கள் மலரும் தமிழீழத்தை பார்க்க வேண்டும்' என்று குட்டிமணி கூறினார்.

'ஆயுதங்கள் எங்கள் மீது திணிக்கப்பட்டவை' என்று தங்கத்துரை கூறினார். ஆனால், 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து ஒரு குண்டு சத்தமாவது கேட்டதா? தமிழ் மக்கள் மிகவும் அமைதியாகவே இருக்கின்றார்கள்.

ஆட்சியாளர்கள் மாறி ஒன்றரை வருடங்கள் கடந்தும் சமாதானத்திற்கான தூரம் இன்னும் எட்டாக்கனியாகவே தெரிகின்றது. நாங்களும் நீங்களும் இந்த நாட்டின் சம பங்காளிகளாக வாழ வேண்டுமானால் தமிழர்களை ஒரு தேசிய இனமாக தென்னிலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.   

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பில் இன்று பதிவாகியுள்ள மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பில் இன்று பதிவாகியுள்ள மாற்றம்

தேசிய கலைக்கூடத்தில் இருந்து காணாமல் போயுள்ள 42 பழங்கால ஓவியங்கள்

தேசிய கலைக்கூடத்தில் இருந்து காணாமல் போயுள்ள 42 பழங்கால ஓவியங்கள்



மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US