அமெரிக்க தூதுவரை கவர்ந்த மெனிகே மகே ஹிதே பாடல்!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைய்னா பி டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz), இலங்கைப் பாடலான மெனிகே மகே ஹிதேவின் வயலின் பதிப்பைக் கேட்டு மகிழ்ந்ததாகக் கூறியுள்ளார்.
கலிபோர்னியாவின் தெருக்களில் கரோலினா ப்ரோட்சென்கோ என்பவர் வாசித்த வயலின் பதிப்பு, இசை என்பது உலகளாவிய மொழி என்பதற்கு ஒரு சான்று என்று தூதுவர் ட்வீட் செய்துள்ளார்.
யுக்ரேனிய நாட்டைச் சேர்ந்த புரோட்சென்கோ தனது யூடியூப் அலைவரிசையில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார், அதில் 'மெனிகே மகே ஹிதே' என்ற பாடலுக்கு தாம் வயலின் வாசிப்பதை அவர் பதிவிட்டுள்ளார்.
யோஹானி மற்றும் சதீஷனின் மெனிகே மகே ஹித்தேயின் வயலின் அட்டைப் பாடல் என்று அவர் ஒரு செய்தியை அதில் வெளியிட்டுள்ளார். யோஹானி மற்றும் சதீஷனின் மெனிகே மகே ஹிதே தற்போது உலக தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ளது.
இந்த வாரம் யூடியூப் உலக தரவரிசையில் இலங்கை பாடல் 7 வது இடத்தில் உள்ளது. அத்துடன் யோஹானி மற்றும் சதீஷனின் ‘மெனிகே மகே ஹிதே’ யூடியூபில் 119 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
நடிகர் அமிதாப் பச்சன் (Amitabh Bachchan) இந்த பாடலின் ஹிந்தி பதிப்பிற்கு நடனமாடும் காணொளியை பகிர்ந்து இந்தியாவின் கவனத்தை ஈர்த்த பிறகு இந்த பாடல் உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
I enjoyed listening to @Karolina_Violin play the #SriLankan song #ManikeMageHithe on the streets of California! I hope you enjoy it too. Such a testament as to music as the universal language. https://t.co/KfWn0tK4TL pic.twitter.com/dQk0l0D5Z8
— Ambassador Teplitz (@USAmbSLM) September 23, 2021