ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி சிங்கள மொழிக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற அமர்வுகளின் போது சிங்கள மொழியில் மட்டும் அமர்வுகள் நடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த அமர்வில் பங்கேற்றவர்கள் இது தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர் என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மொழிபெயர்ப்பாளர்களின் உதவி பெற்றுக்கொள்ளப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி கிழக்கு மாகாணத்தின் பிரதேச செயலகம் ஒன்றில் நடாத்திய அமர்வின் போது சிங்கள மொழியில் மட்டும் பேசியதாகவும்,அதனை புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் அமர்வில் பங்கேற்ற ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமர்வில் பங்கேற்றிருந்தவர்களே மொழி பெயர்ப்பு செய்ததாகவும், அது மிகவும் அடிப்படையான மொழி பெயர்ப்பாக காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் இன சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தை தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு அமர்வுகளின் பேசுவதற்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செயலணி பௌத்தர்களின் பிரச்சினைகள் குறித்து மட்டும் கவனம் செலுத்தும் ஒர் போக்கினை அவதானிக்க முடிந்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அமர்வுகளில் பங்குற்றவர்கள் புத்திஜீவிகள் எனவும் அவர்களுக்கு மொழிப் பிரச்சினை இருக்கவில்லை எனவும் செயலணியின் தலைவர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பங்கேற்றவர்களில் பலருக்கு சிங்கள மொழியை புரிந்து கொள்ள முடிந்தது எனவும் அவ்வாறு முடியாதவர்களுக்கு மொழி பெயர்க்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.