பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி பத்ம பூஷண் வாணி ஜெயராம் (வயது 78) தனது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
1974 ஆம் ஆண்டு வெளியான 'தீர்க்க சுமங்கலி' படத்தின் மூலம் திரையுலகிற்கு பின்னணி பாடகியாக அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல் செய்தி
இவரது மறைவுக்கு திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வாணி ஜெயராம் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.
டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,

திறமையான வாணி ஜெயராம் ஜி, பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான குரல் மற்றும் செழுமையான படைப்புகளுக்காக நினைவுகூரப்படுவார். அவரது மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி எனத் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam