கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: பாடகி சுஜீவாவின் கணவரின் உடல் அடக்கம்
அதுருகிரியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த பாடகி கே. சுஜீவாவின் கணவர் நயன வசுல விஜேசூரியவின் இறுதிக் கிரியைகள் இன்று (10) தலஹேன பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளன.
அத்துருகிரிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் அதுருகிரிய - இரத்துவிலவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நயன வசுலா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பாடகி சுஜீவா தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது இரண்டு மகள்களிடம் சடலத்தை கையளிக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
20 வருடங்கள் துறவியாக வாழ்ந்து வந்த “கம்பஹா மஹாநாம தேரர்” என்ற இவர் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களில் மூலம் இலங்கை முழுவதும் புத்தர் பிரசங்கங்களை செய்து வந்துள்ளார்.
அதன்பின், இவர் பாடகி கே.சுஜீவாவுடன் காதல் உறவில் ஈடுபட்டு அவரை திருமணம் செய்து கொள்வதற்காக துறவி வாழ்க்கையை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri