திரைப்பட பாடகர் ஸ்ரீனிவாஸிடம் பாராட்டுக்களை பெற்ற தமிழ் பாடகி சாம்பவி!
திரைப்பட பாடகர் ஸ்ரீனிவாஸ் கனடா நாட்டை சேர்ந்த தமிழ் பாடகி சாம்பவியுடன் இணைந்து தான் பாடிய பாடலொன்றினை தனது முகப்புத்தக பதிவில் பதிவிட்டு பாராட்டியுள்ளார்.
பாடகர் ஸ்ரீனிவாஸ், தமிழ் பாடகி சாம்பவியுடன் இணைந்து முதல்வன் படத்தின் "உளுந்து வெதைக்கையிலே" பாடலின் short cover versionஐ பாடி பகிர்ந்துள்ளார்.
பாடகி சாம்பவியின் பாடல் குறித்து அவர் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றினை பதிவிட்டு பாராட்டியுள்ளார்.அந்த பதிவில்,
இலங்கை தமிழர்கள் எந்தளவு தமிழக கலைஞர்களை நேசிக்கின்றார்கள். பாடகி சாம்பவியை போல் திறமை படைத்த தமிழர்கள் இன்று வெளிநாடுகளில் ஒளிர்வதனை பார்க்கின்ற போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் திரைப்படத்துறையில் தனெக்கென்ற ஒரு இடத்தை பிடித்து ரசிகர்களின் அன்பை பெற்ற பாடகரொருவர் இவ்வாறு பாராட்டியிருப்பது எங்கள் நாட்டிற்கும், பாடகிக்கும் கிடைத்த பெரிய ஒரு அங்கீகாரம் என பலரும் சாம்பவியை பாராட்டி வருகின்றனர்.
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri