சிங்கள ராப் பாடகர் போதைப்பொருளுடன் கைது
சிங்கள ராப் பாடகரான ''மதுவா'' என்றழைக்கப்படும் மாதவ பிரசாத் என்பவர் போதைப் பொருள் மற்றும் விளையாட்டுத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஹதுடுவை பொலிசார் நேற்றையதினம்(25) அவரைக் கைது செய்துள்ளனர்.
மதுவா கைது
மதுவா கைது செய்யப்படும்போது அவரிடம் இருந்து போலி கைத்துப்பாக்கியொன்றும், 20 கிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் ஹேஷ் போதைப்பொருள் 35 கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மதுவா உள்ளிட்ட ஆறுநபர்கள் டீப்போ ஒன்றில் போதைப் பொருள் மற்றும் கைத்துப்பாக்கியொன்றை வைத்துக் கொண்டு , மதுபானம் அருந்தும் காணொளியொன்று அண்மையில் வெளியாகியிருந்தது.
அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரதிபலனாக 'மதுவா' என்றழைக்கப்படும் மாதவ பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தனது ரசிகர்களை அதிகரித்துக் கொள்வதற்காக போலிக் கைதுப்பாக்கியைக் கொண்டு அவ்வாறான ஒரு காணொளியொன்றை வெளியிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



