வடக்கு கிழக்கில் தொடரும் மௌன யுத்தம் : நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்

Batticaloa Sri Lanka Politician Sri Lankan political crisis North Western Province Liberation Tigers of Tamil Eelam
By Bavan Jun 25, 2023 01:41 PM GMT
Report

வடக்கு - கிழக்கில் தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்றையதினம் (24.06.2023) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 33ஆவது நினைவேந்தலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ''தமிழீழ விடுதலை போராட்டத்திலே பல நாட்டகள் தமிழ் மக்களால் மறக்க முடியாத வடுக்கள் நிறைந்த நாளாக இருக்கின்றது. அந்த நாட்களின் ஒரு நாளாகவே 19 யூன் 1990 ஆம் ஆண்டு விடுதலைப் போரட்ட பாதையிலே ஒரு கறுப்பு புள்ளி விழுந்த நாளாகும்.

தமிழீழ ஆயுத போராட்டம்

தமிழ் மக்கள் ஆயுத போராட்டத்தை விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல ஆயுத போராட்டம் எங்கள் மீது திணிக்கப்பட்டது இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து நாங்கள் தமிழினம் இரண்டாம் தர பிரஜைகளாக இந்த நாட்டிலே அழைக்கப்பட்டோம்.

இவ்வாறு தனி சிங்களசட்டம் கொண்டுவரப்பட்டதில் இருந்து தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட 1957, 1958, 1978, போன்ற கலவரங்களை தொடர்ந்து மிகவும் மோசமாக 83 கலவரத்தை உருவாக்கி கப்பல் மூலம் வட கிழக்கிற்கு சொந்த நாட்டிலே அகதிகளை அனுப்பிய வரலாறு ஆகும்.

வடக்கு கிழக்கில் தொடரும் மௌன யுத்தம் : நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் | Silent War In North East Mp Govindan

இவ்வாறு தமிழர்கள் மீது நடந்தேறிய இன அழிப்பிற்கு எதிராக அகிம்சை மூலமாக போரடிய எமது தலைவர்கள் அதில் நம்பிக்கையிழந்து உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாங்கள் ஆயுத போராட்டத்திற்குள் தள்ளப்பட்டோம்.

அதனால் 1969ஆயுத போராட்டம் முதல் தமிழீழ விடுதலை இயக்கம் அதில் பிரபாகரன் உட்பட போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் இருந்தார்கள் இந்த நிலையில் 83 கலவரத்தை அடுத்து ஈழவிடுதலை போராட்டம் ஒரு வித்தியாசமான பாதைக்குள் சென்றது.

முன்னணியில் 5 போராட்ட இயக்கங்கள் இருந்தது அப்போது அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் தான் எமது இலக்கை அடையமுடியும் என 1984 ஆம்ஆண்டு ஈழ தேசிய விடுதலை முன்னணி என்று ஈரோஸ், ரொலே, ஈபிஆர்.எல்.எப். என மூன்றும் ரி.என்.எல்.எப். உருவாகியது பின்னர் விடுதலைப் புலிகளும் அதில் இணைந்தனர் என்பது வரலாறுகள்.

எதிர்க்கட்சியினரின் நல்லாட்சி

ஆனால் விடுதலைப் புலிகள் மாத்திரம் வடகிழக்கிலே இந்த போராட்ட பாதையில் நின்று இருந்தாலும் 2009 மே 18 உடன் இந்த ஆயுத போராட்டம் முற்று முழுதாக மௌனிக்கப்பட்டது.

இந்த போரட்டம் மௌனிக்கப்படும் முன்னர் பல தலைவர்களை இழந்திருக்கின்றோம் அதில் போரட்ட தலைவர்கள் மாத்திரமல்ல மிதவாத கட்சியான தழிழர் விடுதலைக் கூட்டணி தமிழரசு கட்சி போன்றவற்றின் தலைவர்கள் அமிர்தலிங்கம் உட்பட பல தலைவர்களை இழந்திருக்கின்றோம்.

வடக்கு கிழக்கில் தொடரும் மௌன யுத்தம் : நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் | Silent War In North East Mp Govindan

ஜே.ஆர். ஜெயவர்த்தனா காலத்திலே சமாதன பேச்சுக்கே இடமில்லாமல் தமிழ் மக்களின் குரல்வலையை நசுக்கினார் 2009 வரை தமிழ் மக்களை வஞ்சித்துக் கொண்ட அரசு ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு வடக்கு கிழக்கில் வித்தியாசமான ஒரு திணிப்பை செய்துவருகின்றது அதுதான் தமிழர் தேசத்தில் விகாரைகள் அமைக்க வேண்டும்.

தமிழரின் குடிபரம்பலை எவ்வளவு வேகமாக மாற்றி அமைக்க வேண்டும் இணைந்திருந்த வடகிழக்கை வெலிஓயா குடியேற்றம் மூலம் நில தொடர்பற்ற மாகாணங்களாக இரண்டு மாகாணங்களையும் பிரிப்பது போன்ற நடவடிக்கையை திட்டமிட்டு செய்துவருகின்றது.

தற்போதைய எதிர்கட்சி தலைவாரான சஜித் நல்லாட்சி காலத்தில் புத்தசாசன அமைச்சராக இருந்தபோது வடகிழக்கில் ஆயிரம் விகாரை அமைக்கவேண்டும் என்ற அவர் தற்போது இலங்கையிலே ஆயிரம் தாது கோபுரங்களை படிப்படியாக அமைக்கவேண்டும் என கூறியுள்ளார்.

 காணிகள் அபகரிப்பு

ஆகவே தற்போது வடகிழக்கில் நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் தமிழ்மக்களின் காணிகள் அபகரிப்பு தமிழர் பிரதேசங்கள் எங்கும் விகாரைகள் குறிப்பாகஉயர்ந்த மலைகளில் அமைப்பது சுற்றுலா பயணிகள் கூட இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை பறைசாற்றுவதற்காக இந்த திட்டங்களை செய்து வருகின்றனர்.

குருந்தூர் மலையிலே பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்த காணிகள் இன்று தொல்பொருள் என்று பெயரில் அபகரிக்கட்டுள்ளது.

சரத்வீரசேகர, உதயகம்பன்வெல, விமல்வீரன்ச போன்ற அரசியல்வாதிகள் தங்களது நிரச்சி நிழலுக்குள் செயலாற்றிக் கொண்டு வடகிழக்கு மாகாணங்கள் தமிழ் தாயகம் என தம்பட்டம் அடிக்கும் தமிழர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக சரத்வீரதேசகர தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் தொடரும் மௌன யுத்தம் : நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் | Silent War In North East Mp Govindan

எனவே தமிழர்களுடைய தாகம் விடுதலை நோக்கம் இன்னும் தனியவில்லை என அமைச்சருக்கு தெரியவேண்டும்.

அதேவேளை கோட்பாயாவின் விசுவாசியான புதிதாக தேசிய பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் வந்த வெளிநாட்டு அமைச்சர் ஒரே இரவில் தீர்வை கொடுக்கமுடியாது கிடைப்பதை பெற்றுக் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

எனவே இனப்பிரச்சனை தோன்றி எத்தனை ஆண்டுகள் என அவருக்கு தெரியாமல் இருக்கலாம், ஒரே இரவில் இந்த பிரச்சனைக்கான தீர்வை கேட்கவில்லை.

அரசியல் அதிகாரம் 

இந்நிலையில் நாடு சுதந்திரமடைந்த காலம் இருந்தே தமிழர்கள் இனப்பரச்சனையை தீர்ப்பதற்காக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம் தந்தை செல்வா பேச்சுவார்த்தை , பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், மற்றும் திம்பு பேச்சுவார்த்தை, 2001 பேச்சுவார்த்தை 2009 பின் மகிந்தவுடன் 18 சுற்று பேச்சுவார்த்தை.

உட்பட தற்போதும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கின்றது தற்போதைய ஜனாதிபதி ஒரு சர்வதேச அழுத்தத்தின் மத்தியிலே இந்த நாட்டை நடத்துகின்றார்.

1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது அதன் மூலம் உருவாகிய குறைமாத குழந்தையான மாகாணசபை முறைமை ஏற்படுத்தப்பட்டது இந்த 13 திருத்த சட்டத்தை முற்று முழுதாக தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்காக யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை.

வடக்கு கிழக்கில் தொடரும் மௌன யுத்தம் : நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் | Silent War In North East Mp Govindan

ஆனால் அரசியல் அதிகாரத்தில் ஆசையற்ற பத்மநாபா கிடைப்பதை எற்றுக் கொண்டு அதிலிருந்து நாங்கள் முன்னேறிச் செல்வோம் என்ற அடிப்படையில் அந்த மாகாணசபை அதிகாரத்தை பெற்றுக் கொண்ட முதல் தலைவர் பத்மநாபா அதிகாரத்தில் ஆசையில்லாத காரணத்தால் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை.

அப்படிப்பட்ட ஒரு தலைவரது ஞாபகார்த்த தினம்தான் இந்த 19 யூன் என்பது. எனவே நாங்கள் கிடைப்பதை பெற்றுக் கொண்டு எங்கள் மக்களுக்கு துரோகம் செய்வதற்கு நாங்கள் அரசியல் செய்யவில்லை.

தமிழ் தேசிய கூட்டடைப்பு விடுதலைப் புலிகள் இயங்கு நிலை இருந்த காலத்திலே 2001இல்  உருவாக்கப்பட்டது.

அப்போது கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து தமிழ் மக்களுக்கு ஒரு பலமான அரசியல் சக்தி இருக்கவேண்டும் என்ற காரணத்திற்காக இந்த கூட்டமைப்பை உருவாக்கினோம்.

2009 ஆம் வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு அசைக்கமுடியத சக்த்தியாக இருந்தது 2004 தமிழ் விடுதலை கூட்டணி வெளியேறியது 2010 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெளியேறியது 2015 ஈபி. ஆர். எல். எப் வெளியேறியது.

அதேபோன்று 2023 தமிழரசு கட்சி வெளியேறியுள்ளது. ஆனால் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பலமான 5 கட்சிகள் கொண்ட அணியாக செயற்படுகின்றோம்''என்றார்.   

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US