சம உரிமை இயக்கத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கையொப்பமிடும் போராட்டம்!
சம உரிமை இயக்கம், மட்டக்களப்பு பேருந்து தரிப்பு நிலையத்தில் கையொப்பமிடும் போராட்டம் ஒன்றை ஆரம்பித்து வைத்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கு, இன்னொரு அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய், அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்யும் அரசியலமைப்பிற்காகப் போராடுவோம் என்ற தலைப்பில் எதிர்ப்பு பதாதையில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கையொப்பமிடும் போராட்டம்
மாவட்ட இணைப்பாளர் கிருபாகரன் தலைமையில் எதிர்ப்பு பதாதையில் கையொப்பமிடும் போராட்டம் இன்று சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பிடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது ஈரோஸ் ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவர் இராஜேந்திரா, சம உரிமைகள் இயக்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு எதிர்ப்பு பதாதையில் கையொப்பமிடும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்து துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.
இதன் போது அங்கு அதிகமான பொதுமக்கள் ஆர்வமாக சென்று இந்த எதிர்ப்பு பதாதையில் கையொழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.