தையிட்டி விகாரைக்குள்ளும் தமிழர்களின் உடலங்கள்! உண்மைகள் மறைக்கப்படுகிறதா...
தையிட்டி விகாரைக்குள்ளும் தமிழர்களின் உடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என தமக்கு சந்தேகம் எழுவதாக வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.
எமது லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் இதனை கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,'எங்கெல்லாம் இராணுவ முகாம்களாக காணிகள் கையகப்படுத்தப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் மனித புதைகுழிகள் இருக்கின்றன.
அதேபோன்று எங்கெல்லாம் இவர்கள் விகாரைகள் கட்ட முயற்சிக்கின்றனரோ அங்கும் மனித புதைகுழிகள் இருக்கலாம் என எமக்கு சந்தேகம் உள்ளது.
காரணம் மனித புதைகுழிகள் இருக்கும் இடத்தில் தையிட்டி போன்ற விகாரைகளை நிர்மாணித்துவிட்டால் யாரும் ஆலயங்களை எதும் செய்யமாட்டார்கள் என அவர்களுக்கு தெரியும்.
எனவே அங்குள்ள மனித புதைகுழிகளை அப்படியே மூடி மறைக்கலாம் என நினைக்கிறார்கள்.''என்று கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...,