தையிட்டி விகாரை தொடர்பில் பிமல் ரத்னாயக்கவை சந்தித்த காணிக்கான மக்கள் உரிமை இயக்கம்
காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கம் பெளத்த சாசன அமைச்சர் பிமல் ரத்னாயக்கவை சந்தித்துள்ளனர்.
நேற்றைய தினம் (20) மாலை 2.00 மணிக்கு பத்தரமுல்லையில் அமைந்துள்ள பௌத்த சாசன அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சர் பிமல் ரத்னாயக்கவை(Bimal Rathnayake) சந்தித்து தையிட்டி மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
தையிட்டி விகாரை
தையிட்டி திஸ்ச விகாரை அமைந்துள்ள மக்களின் காணிக்கான உரிமை பத்திரங்கள் காண்பிக்கப்பட்டதுடன் இது அவர்களுடைய பூர்விக வாழ்விடம் என்பதனையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் குறித்த காணியை விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் காணி உரிமைக்கான மக்கள் அமைப்பை சேர்ந்த பிரியங்கரகொஸ்தா, நட்டாஷா, காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் வடமாகாண தலைவர் இ.முரளிதரன், யாழ்மாவட்ட உறுப்பினரும், தையிட்டி காணி உரிமையாளருமான சாருஜன் உட்பட 6காணி உரிமையாளர்கள், யாழ்பல்கலைகழக பேராசிரியர் திருவரங்கன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.



நான்கு நாட்டவர்கள்... மொத்தம் 532,000 புலம்பெயர்ந்தோருக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

இந்தியன் வங்கியின் IND Super 400 நாட்கள் FD திட்டத்தில் ரூ.4,44,444 முதலீடு செய்தால்.., எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

ரவீந்தர் வீட்டில் மகிழ்ச்சி செய்தி- மனைவி, குடும்பத்துடன் கொண்டாடிய தருணம்.. மகனும் இருந்தாரா? Manithan
