யாழில் பயங்கரவாத தடைச்சட்டத்தை தடை செய்யக்கோரிய கையெழுத்து போராட்டம்(Video)
யாழில் பயங்கரவாத தடைச் சட்டத்தைத் தடை செய்யக்கோரிய கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இக்கையெழுத்து போராட்டம் இன்றைய தினம் காலை ஏழு மணிக்கு அச்சுவேலி பிரதான பேருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர், யுவதிகள் விசாரணை இன்றி கைது செய்யப்பட்டு நீண்டகாலமாகச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதுடன் மிகவும் மோசமான சட்ட ஏற்பாடுகளைக் கொண்ட பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ச்சியான கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த கையெழுத்து போராட்டத்தில் பொதுமக்களின் கையெழுத்து பெற்று பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கக் கோரி கிராமங்கள் தோறும் குறித்த கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான அணியினர் கையெழுத்தினை
பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.







