பருத்தித்துறையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கக்கோரிய கையெழுத்து போராட்டம்(Video)
பருத்தித்துறையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கக்கோரி கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் பருத்தித்துறை நகரில் இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இக்கையெழுத்து போராட்டத்தில் ஆர்வத்துடன் மக்கள் கையொப்பமிட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
இந்நிகழ்வில் பருத்தித்துறை நகர சபை தவிசாளர் ஜோ. இருதயராசா, பருத்தித்துறை நகரசபை உறுப்பினரான திரு நவரத்தினக், பருத்தித்துறை பிரதேச சபை உப தவிசாளர் கு.தினேஸ், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான வே.பிரசாந்தன், க.சிறிக்காந்தரூபன், த.சந்திரதாஸ், சி.பிரசாத், சி.தியாகலிங்கம், க.தவயோகநாதன், தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் ச.திரவியராசா மற்றும் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள், இளைஞர், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.





Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
