மன்னாரில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம் (PSTA)) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்டத்தில் கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இன்றைய தினம் (25.2.2026) தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது.
கோரிக்கை
இதன்போது, PTA ஐ நீக்கு, PSTA சட்ட வரைவை மீள பெறுக,ஊடக சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும், நீதித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும், மனித மாண்பு பேணப்பட வேண்டும்,உயிர் வாழ்வதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும், அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணான மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் சட்டங்களுக்கு எதிராக எமது குரலை வலுப்படுத்துவோம், மக்கள் நலன் கருதி ஒருமைப்பாட்டுடன் செயற்படுவோம்' உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan