பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராகக் கையெழுத்து வேட்டை(Photos)
பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறு கோரி அண்மை நாட்களாக யாழின் பல்வேறு பகுதிகளில் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த செயற்றிட்டமானது தமிழரசுக்கட்சியின் வாலிபர் அணியால் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
திருகோணமலை
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி திருகோணமலையில் கையெழுத்து போராட்டமொன்று இன்று (26) முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட வாலிபர் முன்னணி ஏற்பாடு செய்த கையெழுத்து போராட்டம் திருகோணமலை சிவன் கோயிலடி தந்தை செல்வா உருவ சிலைக்கு முன்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் மாவை சேனாதிராஜா,எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், கலையரசன், மற்றும் திருகோணமலை மாவட்ட தலைவர் குகதாசன் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியினால் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலான துண்டு பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அத் துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டதாவது,
1979 ஆம் ஆண்டின் நாற்பத்தி 8ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு சட்டமே தற்காலிக எமது சட்டப் புத்தகங்களில் காணப்படும் மிக கொடூரமான தற்போதும் சட்டமாக காணப்படுகின்றது.
1979ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாக நிறைவேற்றப்பட்ட சட்டம் அதன் தலைப்பில் தெரிவிப்பது போல தற்காலிக ஆறு மாத காலத்துக்கு மட்டும் செல்லுபடியாக வேண்டியது 42 வருட காலங்கள் நீடித்து அநீதியை விளைவித்து அநேகருக்கு துன்பங்களையும் கஷ்டங்களையுமே வழங்கியுள்ளது.
இந்தச் சட்டத்தின் விதிகள் நமது குற்றவியல் சட்டத்தின் அடிப்படை மூலாதாரங்களுக்கு எதிரான திசையில் இயங்குகின்றன. உண்மையில் விசாரணை நிலுவையில் உள்ள குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் குற்றமற்றவர் என்ற அனுமானமும் கூட எமது சட்டம் காவல்துறையிடம் வழங்கப்படும்.
எந்த வாக்குமூலத்தையும் கண்டுகொள்வதில்லை. இது நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படாது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் மாத்திரமே விதிவிலக்காக ஒரு உதவி காவல் அதிகாரி பதவிக்கு குறையாத ஒரு காவல்துறை அதிகாரியிடம் வழங்கப்படும் வாக்குமூலம் குற்ற ஒப்புதலாக ஏற்றுக்கொள்ளப்படும்.
இருந்த போதிலும் அது ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படும் இந்த விதி மட்டுமே பல தவறான தீர்ப்புகளுக்கு வழி வகுத்தது மட்டுமல்லாது காவல்துறையின் விசாரணைத் திறனை மழுங்கடித்தது என்பதனை சொல்ல தேவையில்லை. உண்மையான குற்றவாளி இன்னும் சுதந்திரமாக இருக்கும் அதேவேளையில் ஒரு குறிப்பிட்ட குற்றம் தீர்க்கப்பட்டு விட்டதாக கூறுவதற்கும் ஒரு தீர்ப்பினை வலுவாக்க ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்படுவதே போதுமானது என்பதாலும் இது எதிர் விளைவாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒப்புதல் வாக்குமூலங்கள் தடுப்புக் காவல் மற்றும் துணை இல்லாமல் காவலில் வைப்பதற்கான விதிகள் ஆகியவை காவல்துறை சித்திரவதை நிகழ்வுகளை அதிகரிக்க செய்துள்ளது.
இக்காலகட்டத்தில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரசுரிக்கப்பட்ட தீர்ப்புகளை அவதானித்தால் இதனை கண்டு கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக சர்வதேச மனித உரிமைகள் தர நிலைகளுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கு இலங்கை உறுதி அளித்திருந்தது. 2018 இல் ஒரு சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டது.
இருப்பினும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நிறுத்துவதாக ஜனவரி 27ஆம் திகதி அதன் திருத்தத்திற்கான சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் நடைமுறையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் அவைகளிலும் அதைத் தொடர்ந்து வரும் கடுமையான விளைவுகள் இன்னும் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது இந்த பின்னணியில் நாம் பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்குவதாக தாம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வலியுறுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம்
கல்வியங்காட்டு பகுதியில் இன்றையதினம் இக்கையெழுத்து வேட்டையானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இச் செயற்பாட்டிற்குப் பங்களிப்பு வழங்கினர்.
மன்னார்
நாடளாவிய ரீதியில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்து போராட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இன்று(26) காலை 9 மணியளவில் மன்னார் பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.
பயங்கரவாத தடை சட்டம் என்ற போர்வையில் மனித உரிமைக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்று முழுதாக நீக்கக் கோரி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தின் பகுதியாக இன்றையதினம் மன்னாரில் பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் ,இராசமாணிக்கம் சாணக்கியன் நகரசபை ,பிரதேச சபை உறுப்பினர்கள், தவிசாளர்கள், பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், அருட்தந்தையர்கள், மத குருக்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டு கையெழுத்து போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.
நவரசம் எனும் கவிதை நூல் வெளியிட்டமையின் காரணமாகப் பயங்கரவாத தடை சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட அஹானாப்பும் கையெழுத்து போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வட்டக்கச்சி
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் இன்று வட்டக்கச்சியில் நடைபெற்றது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் பல பகுதிகளிலும் இடம்பெற்று வரும் நிலையில் இன்று காலை வட்டக்கச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
[
[

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
