மன்னாரில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்
மன்னாரில் (Mannar) அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று காலை (30) பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தின் முன்பாக நடைபெற்றுள்ளது.
பலர் பங்கேற்பு
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும் புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.
இதில் அருட்தந்தையர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கடற்தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
